மும்பையில் ரூ.65 கோடிக்கு சொகுசு பங்களா வாங்கிய பிரபல நடிகை ஜான்வி கபூர்

Prasuat month's ago

நடிகை ஜான்வி கபூர் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் சொகுசு பங்களா வீடு ஒன்றை ரூ.65 கோடி வாங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி திரை உலகில் பிரபல நடிகையாக இருந்த ஶ்ரீதேவி சில வருடங்களுக்கு முன்பு வெளிநாடு சென்றபோது ஓட்டல் குளியல் அறை தொட்டியில் மூழ்கி மரணம் அடைந்தார். 

இவரது மூத்த மகள் ஜான்வி கபூர் இந்தி படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஜான்வியின் தந்தை போனிகபூர் தமிழில் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை. வலிமை ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

தற்போது அஜித்தின் துணிவு படத்தையும் தயாரித்து வருகிறார். விரைவில் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க ஜான்வி கபூர் முயற்சி செய்து வருகிறார். 

இந்த நிலையில் ஜான்வி கபூர் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் சொகுசு பங்களா வீடு ஒன்றை விலைக்கு வாங்கி இருப்பதாகவும், இந்த வீட்டின் விலை ரூ.65 கோடி இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த பங்களாவை தன் தந்தை போனி கபூர் மற்றும் தனது சகோதரி குஷி கபூர் ஆகியோருடன் இணைந்து வாங்கி இருக்கிறார் என்கின்றனர். 

6 ஆயிரத்து 421 சதுர அடியில் அமைந்துள்ள இந்த வீட்டில் தோட்டம், நீச்சல் குளம், 5 கார்களை நிறுத்தி ைவக்க வசதி போன்றவை உள்ளதாம்.