ஈழத்து கலைஞன் சாந்தனின் மகன் கோகுலனின் ஆதங்கப் பதிவு - கலைஞர்களே சிந்தியுங்கள்

#Lanka4
Prasuat month ago

மெல்லிசைக்கலையின் அத்திபாரமே இசைக்கலைஞர்கள் அவர்கள் இன்றி இங்கு எந்த பாடகர்களும் இல்லை '  அவர்களின் தொழில்வாழ்க்கை இன்று அழிவை நோக்கி செல்கிறது ஈழத்தில் ' இப்படியே போனால் ஈழத்தில் எதிர்காலத்தில் மெல்லிசைக்கலைஞர்கள் வாழ்ந்தார்கள் என்ற சுவடு மட்டுமே இருக்கும். 

கரோக்கி என்ற நாமம் இன்று எம்மவர்கள் மத்தியில் அதுதான் இசை அதுவே தெய்வம் என்றாகிவிட்டது,நல்லது'ஒரு பாடகனாய் இது பற்றி கதைக்கவேண்டிய தேவைகூட எனக்கில்லை என்றாலும்கூட என் மனம் வலிக்கிறது ' பதறுகிறது 😔
 
இன்றும் எம்மவனின் பதிவைபார்த்தேன் '  காலம் ஒரு அற்புதமான வாத்தியக்கலைஞனை கரோக்கி செய்யும் நிலைக்கு தள்ளிவிட்டதே என்று எண்ணுகின்ற போது மனது உடைந்து நொருங்கிபோனேன் ' அவனில் பிழையில்லை 

தனியொருவனால் என்ன செய்துவிடமுடியும் ' ஒன்றாய் கூடி பேசி நடந்தாலே அவனுக்கு அவனுக்கு அடுத்து வரும் கலைஞருக்கும் தீர்வு கிட்டும் நான் எந்த கரோக்கி நடத்துபவர்களுக்கோ இல்லை அதில் பாடும் பாடகர்களுக்கு எதிரானவன் இல்லை 'நீங்கள் 

ஒரு கசப்பான உண்மையை உணரவேண்டும் எதிர்காலத்தில் இசைக்கலைஞர்களை அழித்த பெருமை உங்களையே சேரும் ' நாங்கள் நீங்கள் பாடுகின்ற கரோக்கி இசைகூட முறைப்படி பயின்ற இசைக்கலைஞர்களின்  உருவாக்கத்தில் உருவானவையே'  

கரோக்கி எமக்கு வருமானத்தை தரும் வாழ்வாதரத்தை பெருக்கும் உண்மை ' ஆனால் எம் இசையை வளர்க்காது சிதைக்கும் ' இசைக்கலைஞர்களை அழிக்கும் ' ஈழத்தில் இத்துணை சிறப்பு வாய்ந்த இசைக்கலைஞர்கள் பாடகர்கள்  இருந்தார்கள் வாழ்ந்தார்கள் என்பன அழிந்து 

இனி இந்தியாவில் இருந்தே ஒட்டுமொத்த கலைஞர்களும் இங்கு வந்து இசை நிகழ்வுகளை நடாத்தும் போது நாமும் கூட்டத்தோடு கூட்டமாய் இருந்து வேடிக்கை பார்க்கும் காலம் விரைவில் வரும் ' 

ஒரு சிறந்த கலைஞனை பாடகனை உருவாக்க எத்துணை  கலைஞர்கள் பின்னால் உழைக்கிறார்கள் என்பதெல்லாம் யாருக்கு புரியப்போகிறது

இன்று பிரபலமாக கரோக்களில் பாடுகின்ற பாடகர்கள் நாமெல்லாம் பல மேடைகளில் இசைகலைஞர்களினால் புடம்போடப்பட்டவர்கள் புரிந்துகொள்ளுங்கள் கலைஞர்களே 🙏மேடையில் மட்டும் பாடுவதோடு எம் பணி முடிவதில்லை '

சமுதாயத்தின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்கும் கடத்துபவர்கள் கலைஞர்கள்' இதனை நாங்கள் சகோதரமொழி கலைஞர்களிடம் கற்றுக்கொள்ளலாம் ' 

கலைஞர்களுக்கும் கலைக்கும் அழிவு வருகின்றபோது உண்மையாக குரல் கொடுக்க வேண்டும் '  இன்று வாழ்கின்ற எத்தனையோ சிறந்த பாடகர்களை அற்புதமான இசைக்கலைஞர்களை உருவாக்கி இந்த சமுகத்திற்கு அளித்தார்கள் எம் முன் வாழ்ந்த இசைக்கலைஞர்களும் இசை ஆசான்களும்' 

இதனை நாங்கள் ஒவ்வொருவரும் யார் மீதும் குற்றம் சொல்லாமல் நாமாக சிந்தித்து திருந்தி ஒற்றுமையாக ஒரே தீர்மானத்தில் நடந்தால் அன்றி ' போதைப்பொருள் போல் இதுவும் எம்மை எம் கலைஞர்களை அழிக்கும் இதுவே நிதர்சனம் '

இன்றும் கூட பல பெற்றோர்கள் தம்பிள்ளைகளுக்கு  இசைக்கருவிகளையும பயிற்றுவிக்கிறார்கள்எதிர்காலத்தில் அவர்களும் இசைகலைஞர்கள் ஆவார்கள் என்ற நப்பாசையில் யாரைச்சொல்லி நோவது காலம் செய்த கோலம்.
 
"காலம் கலிகாலம் ஆகிபோச்சடா கம்யூட்டர் கடவுளாக'மாறிப்போச்சடா"எண்ட பாட்டுதான் நினைவுக்கு வருது