100கோடி வசூலை சந்தித்த "DON" திரைப்படம்

#Cinema
Prasuat month ago

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ´டான்´ திரைப்படம் ரூ.100 கோடி வசூலை தாண்டியுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்துள்ளது.

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்சன்ஸ் மற்றும் லைகா நிறுவனத்தின் இணை தயாரிப்பில் உருவான டான் திரைப்படம் கடந்த மே 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல்ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்று வந்த நிலையில் தற்போது அப்படம் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

டான் வெளியாகி 12 நாள்களே ஆன நிலையில் ரூ.100 கோடி வசூலை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.