அதிகமான வனப் பரப்பளவை கொண்ட மாநிலம் எது தெரியுமா.?

Prasuat day's ago

நாட்டின் வன மற்றும் மர வளங்களை மதிப்பீடு செய்வதற்காக பணிக்கப்பட்டுள்ள இந்திய வன ஆய்வு அமைப்பு தயாரித்துள்ள ‘இந்திய வன நிலை அறிக்கை 2021’-ஐ மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் புபேந்தர் யாதவ் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், நாட்டின் மொத்த வன மற்றும் மரங்களின் பரப்பளவு 80.9 மில்லியன் ஹெக்டேர் என்றும் நாட்டின் மொத்த புவியியல் பரப்பளவில் இது 24.62% என்றும் கூறினார். 2019-ம் ஆண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டுடன் ஒப்பிடும் போது, கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் மொத்த வனம் மற்றும் மரங்களின் பரப்பளவு 2,261 சதுர கிமீ அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

நாட்டில் உள்ள 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காடுகளின் பரப்பளவு மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது குறித்து அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கவனம் காடுகளை பாதுகாப்பதன் மீது மட்டுமே அல்ல என்றும் ,அவற்றை செழுமைப்படுத்துவதும் கூட என்றும் கூறினார். நாட்டிலேயே அதிகமான வனப் பரப்பளவை மத்திய பிரதேச மாநிலம் கொண்டுள்ளது. மேலும் நாட்டிலேயே அதிகமாக ஆந்திரப் பிரதேசம் 647 சதுர கிலோமீட்டர், தெலங்கானா 632 சதுர கிலோமீட்டர் மற்றும் ஒடிசாவில் 537 சதுர கிலோமீட்டர் வனப் பரப்பளவு அதிகரித்துள்ளது என கூறினார்.

மேலும் இந்திய செய்திகளுக்கு இதில் கிலிக் செய்யுங்கள்.