ஆபத்தான நிலையில் நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர்

#Tamil-Cinema #Actor
Keerthiat day's ago

இந்திய திரைப்பட நடன இயக்குனரும், நடிகருமான சிவசங்கர் மாஸ்டர், தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார்.

பூவே உனக்காக , விஷ்வதுளசி, வரலாறு , உளியின் ஓசை போன்ற படங்களுக்கு சிறந்த நடனாசிரியருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். 2003 ஆம் ஆண்டில், திருடா திருடி படத்தின் புகழ்பெற்ற பாடலான மன்மத ராசா பாடலில் பணியாற்றியதன் மூலம் சிவசங்கரின் புகழ் மேலும் அதிகமானது. நடன இயக்குநர் மட்டுமின்றி சிவசங்கர், கே. எஸ். ரவிக்குமாரின் வரலாறு , பாலாவின் வரலாற்று நாடகப் படமான பரதேசி ஆகிய படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சிகிச்சைக்கான மருத்துவ கட்டணத்தைக்கூட செலுத்த முடியாமல் அவரது குடும்பத்தினர் தவித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.