பிரான்ஸின் கொவிட் தொற்று நிலைமைகள்

#world news #Covid 19 #France
Kesariat day's ago

பிரான்ஸில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொவிட் தொற்று, இறப்பு மற்றும் மருத்துவமனை நிலவரங்களை இன்று நாம் எவ்வாறு அமைந்துள்ளதென்று பார்ப்போமானால்..

கடந்த 24 மணிநேரத்தில் 10.327 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வார செவ்வாய்க்கிழமை 14.534 பேருக்கு தொற்று பதிவாகியிருந்தது. கொரோனா தொற்று தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகின்றது.

மருத்துவமனையில் 9.739 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் 577 பேர் புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2000 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றோடு ஒப்பிடுகையில் 103 பேரால் இது குறைவாகும்.

அதேவேளை,, கடந்த 24 மணிநேரத்தில் 94 பேர் சாவடைந்துள்ளனர். இதனால் மொத்த சாவு எண்ணிக்கை 115.752 பேராக அதிகரித்துள்ளது.