கொரோனா சிகிச்சை நிலையமாக மாறும் கொழும்பு பெரிய பள்ளிவாசல்

#Sri Lanka #Colombo #Covid 19 #Corona Virus
Yugaat month ago

கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை துரித கதியில் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதற்கு உதவிசெய்யும் வகையில், கொழும்பு பெரிய பள்ளிவாசல் கொரோனா சிகிச்சை நிலையமாக கட்டிடத்தின் ஒரு பகுதியை அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் அனுமதிக்கு கோரியுள்ள நிலையில், அனுமதி கிடைத்தவுடன் அங்கேயும் தொற்றாளர்கள் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.