ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வங்காளதேச தேயிலை தோட்ட தொழிலாளர்கள்

#Protest #Bangladesh
Prasuat month ago

வங்கதேசத்தில் ஊதிய உயர்வு கோரி ஒரு லட்சத்திற்கும் அதிகமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தேயிலை தோட்ட தொழிலில் ஈடுபட்டிருக்கின்ற தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 100 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் இது சர்வதேச அளவில் வழங்கப்படும் மிகக் குறைந்த ஊதியம் என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

அதனால் தினசரி ஊதியத்தை 150 சதவீதமாக உயர்த்தி வழங்க வலியுறுத்தி 200 தேயிலை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.