ஓமானில் மனித கடத்தலில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபரின் பிணை ரத்து

Pratheesat month's ago

ஓமானில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி மனித கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேக நபரின் பிணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் சாட்சியமளித்து வருவதுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஆஷா திஸாநாயக்க என்ற சந்தேகநபர் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய நபர் எனவும், பிணையில் விடுவிக்கப்பட்டமை விசாரணைகளுக்கு இடையூறாக அமைந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களையும் அன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக நெத் நியூஸ் நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.