ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த மக்கள் மன்னராட்சி முறையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

#Queen_Elizabeth #Death #Protest
Prasuat day's ago

பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத், கடந்த எட்டாம் தேதி அன்று உடல் நல குறைவு காரணமாக மரணமடைந்தார். உலக நாடுகள் அவரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துக் கொண்டிருக்கின்றது. அதன்படி ஆஸ்திரேலிய அரசும் பிரிட்டன் மகாராணியாரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்தது.

ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவித்தது. இந்நிலையில் உலகில் உள்ள பல நாடுகளை தங்களின் காலனி நாடுகளாக பிரிட்டன் மகாராணியார் பயன்படுத்தி வந்ததால்  அவரின் மரணத்திற்கு அரசாங்கம் துக்கம் அனுசரித்ததை மக்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் மன்னர் ஆட்சி முறையை எதிர்த்து ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு பேரணி நடத்தியிருக்கிறார்கள்.