நல்ல கணவனாக மாதவிடாய் நேரத்தில் உங்களின் மனைவிக்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.

#Health #Women #husband
Kesariat month's ago

பொதுவாக பருவமடைந்த பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் கொஞ்சம் அக்கறையாக இருக்க வேண்டும். இந்த சமயத்தில் தான் பெண்கள் உடலளவிலும்., மனதளவிலும் வலிக்கும் துயருக்கும் மத்தியில் அன்றாட பணிகளை மேற்கொண்டு வருவதால்., அவர்களுக்கு உடற்சோர்வு மற்றும் மனசோர்வானது ஏற்படுகிறது.

இந்த சமயத்தில்., அவர்களுக்கு கணவனாகிய நீங்கள் தேவையான உதவிகளை உங்களால் செய்ய இயலவில்லை என்றாலும்.,மாதவிடாய் நேரத்தில் பொதுவாக பெண்களுக்கு கோபமானது அதிகளவில் ஏற்படும் போது பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும்.. இதற்கு காரணம் என்ன என்று பார்த்தால்., அவர்களின் மாதவிடாய் வலியே.. இந்த நேரத்தில் முடிந்தளவு அவர்களுக்கு பிடித்த உணவுகளை செய்து வழங்கலாம்.

வீட்டு வேலைகள் மற்றும் பிற வேலைகளை சரிவர பெண்கள் செய்யவில்லை என்றால்., அவர்களிடம் தேவையற்று கோபப்பட கூடாது. இந்த சமயத்தில் உடலளவிலும் கடுமையாக அவதியுற்று இருக்கும் பெண்களின் மனதையும் நோகடிக்க வேண்டாம். சில பெண்களுக்கு இடுப்பு வலி மற்றும் கால்களில் வீக்கமானது ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

இந்த நிலையை உணர்ந்து மனைவியிடம் அதிகளவு வலி உள்ளதா? ஏதேனும் உதவி தேவையா? என்று கேட்பதன் மூலமாக இருவருக்கும் இடையே இருக்கும் அன்பானது அதிகரிக்க வாய்ப்புள்ளது. பெண்களுக்கும் சிறிதளவு மன அமைதியானது கிடைக்கும்.

முடிந்தளவு உங்களின் மனைவியாக இருந்தாலும் சரி., உங்களின் தோழியாக இருந்தாலும் சரி…  அவர்களிடம் அன்பு காட்டினால், அவர்களுக்கு ஒரு ஆறுதல் அளிக்கும்.