இலங்கையிலிருந்து மேலும் ஒரு குடும்பம் அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்தனர்

Pratheesat day's ago

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர், இன்று அதிகாலை தமிழகத்தின் தனுஸ்கோடி கடற்பகுதியை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 5 மணியளவில் தமிழக கடல் பகுதியை சென்றடைந்த இலங்கையின் ஏதிலிகளை,  மண்டபத்தில் உள்ள காவல்துறையினர், காலை 8 மணியளவில் கரைக்கு அழைத்து வந்தனர்.

நேற்று இவர்கள் மன்னாரில் இருந்து படகின் மூலம் இந்தியாவுக்கு புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வேலையின்மை உச்சத்தில் இருப்பதாக இந்த ஐந்து பேரைக்கொண்ட குடும்பத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், மண்டபத்தில் உள்ள சிறப்பு முகாமில் முகாமிட்டுள்ள இலங்கை பொருளாதார ஏதிலிகளின் மொத்த எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளது.