அருண் விஜய்யின் பார்டர் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Prabhaat day's ago

அருண் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள பார்டர் படத்தின் வெளியீட்டு திகதி அறிவித்துள்ளனர்.

ஈரம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகனின் புதிய படம் பார்டர். 

அருண் விஜய் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கும் இந்த ஆக்ஷன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அருண் விஜய் படங்களில் குறுகிய நேரத்தில் அதிகம் பேர் பார்த்த ட்ரெய்லர் என்ற சாதனையையும் படைத்தது.

ரெஜினா, ஸ்டெஃபி படேல் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். ஆல் இன் பிக்சர்ஸ் விஜய ராகவேந்திரா படத்தை தயாரித்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

படம் திரையரங்கில் வெளியாகுமா இல்லை நேரடி ஓடிடி வெளியீடா என்று ரசிகர்கள் குழம்பிக் கொண்டிருந்த நேரத்தில், படத்தை திரையரங்கில் வெளியிடுவது என முடிவெடுத்தனர்.

படத்தின் இந்திய திரையரங்கு விநியோக உரிமையை 11 : 11 புரொடக்ஷன்ஸ் பிரபு திலக் வாங்கியுள்ளார்.

பார்டர் படம் நவம்பர் 19-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். அருண் விஜய் ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சிக்குரிய செய்தி. படம் சிறப்பாக வந்திருப்பதாக படத்தைப் பார்த்தவர்கள் கூறியிருப்பது பார்டர் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.