சுமார் 500 தொழிலாளர்களின் இறப்புக்களுக்கு மத்தியில்; உருவாக்கப்பட்ட உலகக் கிண்ண கால்பந்தாட்ட மைதானங்கள்!

kaniat month's ago

தற்போது கட்டாரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளுக்கான மைதான நிர்மாணங்களின்போது 400 மற்றும் 500 க்கு இடையிலான தொழிலாளர்கள் மரணமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது, ஏற்கனவே கட்டார் நாடு வழங்கிய எண்ணிக்கையைக் காட்டிலும் மிக அதிகமானதாகும்.உ
உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளுக்காக 200 பில்லியன் டொலர் மதிப்பிலான மைதானங்கள், மெட்ரோ பாதைகள் மற்றும் போட்டிக்குத் தேவையான புதிய உள்கட்டமைப்புகள் கட்டப்பட்டுள்ளன.
இதற்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டனர்.
2014 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டின் இறுதி வரை இந்த மைதான நிர்மாணங்கள் மேற்கொள்ளப்பட்டன.
முன்னதாக இந்த மைதான நிர்மாணிப்புக்களின்போது ஏற்பட்ட மொத்த இறப்புகளின் எண்ணிக்கையை 40 என்று கூறப்பட்டது.
இதில் மாரடைப்பு மற்றும்; பணியிட விபத்துச் சம்பவங்களும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
2010ஆம் ஆண்டு,  உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியை நடத்தும் உரிமம், கட்டாருக்கு வழங்கப்பட்டது.
இதனையடுத்து மைதான நிர்மாணங்களின்போது தொழிலாளர்களுக்கான குறைந்த மாத ஊதியம் 1000 ரியால்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற தெற்காசியா நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த நிர்மாணிப்புக்களில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்தநிலையில், இந்த நிர்மாணிப்புக்களின்போது இறந்தோர் தொகையை வெளிப்படையாக கட்டார் அறிவிக்காமை தொடர்பில் சர்வதேச மனித உரிமை  அமைப்புக்கள்;, அந்த நாட்டின்மீது குற்றச்சாட்டை சுமத்தியுள்ளன.
அத்துடன் இறந்தோருக்கு உரிய நட்டஈடுகள் வழங்கப்பட்டதா என்பது குறித்தும் அந்த நிறுவனங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.