அஜித்தின் சம்பளம் இத்தனை கோடியா..!?

Prabhaat month ago

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித் குமார்.

இவர் தற்போது வலிமை படத்தில் நடித்துள்ளார். எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்திருக்கிறார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் வலிமை படம், அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.

சமீபகாலமாக முன்னணி நட்சத்திரங்களின் சம்பள விவரங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அஜித்தின் சம்பள விவரமும் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஒரு படத்திற்கு சுமார் ரூ.55 கோடி வரை நடிகர் அஜித் குமார் சம்பளமாக வாங்கி வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.