கணவரின் முதல் திருமணம் பற்றிய சர்ச்சையில் கண்ணீர் விட்ட நடிகை ஹன்சிகா

Maniat month ago

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகா மோத்வானி
தமிழ்,ஹிந்தி,தெலுங்கு, கன்னடம் உள்ள மொழிகளில் ஏராளமான படங்களை நடித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகர்களான விஜய்,சூர்யா,கார்த்திக், சிம்பு,ஜெயம் ரவி உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 4தேதி தன்னுடைய குடும்ப நண்பரான மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள 450 வருடங்கள் பழமை வாய்ந்த மண்டோடா போர்ட் அரண்மனையில் நடந்த முடிந்தது.

ஹன்சிகாவின் தோழி ஒருவரை தான் சோஹெல் கத்தூரியா முதலில் திருமணம் செய்துள்ளார் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர் இதன்பின் அன்சிகாவுடன் பழக்கம் ஏற்பட்டு இருவருக்கும் திருமணம் நடந்தது.

இந்நிலையில் ஹன்சிகாவின் திருமண வீடியோ டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது என புதிய டீசருடன் வெளியாகி உள்ளது, மேலும் டீசரில் ஹன்சிகா தனது அம்மாவிடம் பேசும்போது நீ தான் எனக்கு அடிக்கடி சொல்லி இருக்கிறாய் யாருடைய கடந்த காலத்தை பற்றி பார்க்கக் கூடாது என்று உனக்கு ஓகே என்றால் எனக்கு அது போதும் என்று கண்கலங்கிய படி பேசி உள்ளார் அன்சிகா.
இந்தத் திருமண வீடியோவுக்கு 'லவ் ஷாதி ட்ராமா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது வீடியோவிற்கு கௌதம் மேனன் வாய்ஸ் கொடுத்துள்ளார். மேலும் இந்த டீசர் சோஹேல் கத்துரியாவின் முதல் திருமணம் பற்றிய சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அன்சிகா பேசியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.