நடிகர் கமல்ஹாசன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி, தற்போது ஓய்வில்!

#Kamal #Tamil-Cinema #Tamil People
Kesariat month's ago

நடிகர் கமல்ஹாசன் தனியார் டி.வி. தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும், கட்சி பணியிலும் தொடர்ந்து ஈடுபடுகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர் ஜதரபாத் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, நேற்று முன் தினம் மதியம் சென்னை திரும்பினார். நேற்று முன் தினம் இரவு அவருக்கு திடிர் சுகயீனம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்த வேளையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று, தற்போது நடிகர் கமல்ஹாசன் நலமாக உள்ளார், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையின் வாயிலாக நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், லேசான காய்ச்சல் காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன் வீடு திரும்பினார். மேலும் வீட்டிலேயே அவர் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.