ஒரு லிட்ரோ சிலிண்டர் கூட இல்லாத குடும்பங்களுக்கு புதிய சிலிண்டர்கள் வழங்க நடவடிக்கை!

#Sri Lanka #Litro Gas #Food #prices #sri lanka tamil news #Lanka4 #Tamilnews
Amuthuat month ago

ஒரு லிட்ரோ சிலிண்டர் கூட இல்லாத குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு அடுத்த  மார்ச் மாதம் அவர்களுக்கு புதிய லிட்ரோ சிலிண்டர்கள் வழங்கப்படும் என எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முடித பீரிஸ் தெரிவித்துள்ளார்

புதிய சிலிண்டர்கள் கையிருப்பு ஓடர் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த முதித பீரிஸ், வர்த்தக எரிவாயு சிலிண்டர்களையும் ஓடர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மக்களுக்கான சிலிண்டர்களை விநியோகிக்கும் போது இரண்டு அல்லது மூன்று சிலிண்டர்களை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அவற்றை வாங்குவதைத் தவிர்த்து இதுவரை ஒரு சிலிண்டர் கூட இல்லாத குடும்பங்களுக்கு அவற்றை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.