லாஃப்ஸ் எரிவாயு கப்பலில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிரடி நடவடிக்கை

#Investigation #Laugfs gas
Pratheesat month ago

இலங்கைக்கு வருகை தந்த லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலின் எரிவாயு சிலிண்டர்களை பரிசோதிக்க நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் (CAA) அதிகாரிகள் குழு நேற்று (03) இரவு 9.30 மணியளவில் கப்பலுக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்ததாக CAA தெரிவித்துள்ளது.

இதன்படிஇ மாதிரிகள் நுகர்வோர் அதிகாரசபையின் ஆய்வகங்களில் பரிசோதிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

எரிவாயு தொடர்பில் பாரிய பிரச்சினை எழுந்துள்ளதுடன், நாட்டிற்கு கொண்டுவரப்படும் அனைத்து வாயுக்களையும் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட எரிவாயு மாதிரிகளை தொடர்ந்தும் பரிசோதித்து வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அங்கீகார சபையினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.