திருமண நிகழ்வில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞன் திடீரென உயிரிழப்பு!

#Sri Lanka
Nilaat day's ago

பாணந்துறை பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டிருந்த இளைஞன் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

திருமண நிகழ்வில் கலந்துக்கொண்டு, நடனமாடிக் கொண்டிருந்த தருணத்தில், குறித்த இளைஞன் திடீரென கீழே வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு வீழ்ந்த இளைஞன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.


வாதுவ – பொதுப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

உயிரிழந்த இளைஞனுக்கு PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டதை அடுத்து, சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் நடத்தப்படும் என வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பாணந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்