யாழில் உயிருடன் புதைக்கப்பட்ட பிறந்து ஒரு நாளேயான சிசு!

Rehaat day's ago

யாழ். சாவகச்சேரி – மட்டுவில் வடக்கு பகுதியில் பிறந்து ஒரு நாளேயான சிசுவொன்று உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிராம உத்தியோகத்தரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், புதைக்கப்பட்ட சிசு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.

பிரசவத்திற்கு பின்னர், வீட்டின் பின்புறத்தில் தாயினால் குறித்த சிசு புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும் சிசு யாழ். போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சிசுவின் தாய் சாவக்கச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.