சூட்சுமமாக கஞ்சா வளர்த்த முன்னாள் அரச ஊழியர் சிக்கினார்

#Arrest
Yugaat day's ago

கொட்டாவை - ஹொரஹேன பகுதியில் கஞ்சா செடிகளை பயிரிட்ட நபரொருவரை கொட்டாவ காவல்துறையினர் நேற்று(14) கைது செய்துள்ளனர்.

இந்நபர் வாழைத் தோப்புக்கு மத்தியில் இவ்வாறு கஞ்சா செடிகளை வளர்த்துவந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சோதனையின் போது, நான்கு அடி உயரமும், இரண்டரை அடி உயரமும் கொண்ட நான்கு கஞ்சா செடிகளை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

ஹொரஹேன பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய இச் சந்தேகநபர், விளையாட்டுத்துறை அமைச்சின் ஓய்வுபெற்ற எழுதுவினைஞர் ஒருவரென தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சந்தேகநபர் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.