லியோவுக்கு போட்டியாக ஏகே 62 திரைப்படத்தில் வெற்றி பெற இயக்குனர் ஒருவர் இணைந்திருக்கிறார் .

#Cinema #Tamil-Cinema #Vijay #Tamilnews #Tamil Nadu #Lanka4
kaniat month ago

அஜித் அடுத்ததாக நடிக்க இருக்கும் ஏகே 62 திரைப்படத்தை பற்றிய பேச்சு தான் இப்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் இந்த திரைப்படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இன்னும் சொல்லப்போனால் இயக்குனர் யார் என்பதே இன்னும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

ஆனால் அதற்குள்ளாகவே இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தை பற்றிய பரபரப்பான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி தான் இயக்கப் போகிறார் என்று கடந்த சில நாட்களாகவே பேசப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது அவரை தூக்கி விட்டு வெங்கட் பிரபுவை கமிட் செய்திருப்பதாக ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.

அது மட்டுமல்லாமல் மங்காத்தா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக ஏகே 62 உருவாக இருப்பதாகவும் கூறுகின்றனர். அந்த வகையில் 11 வருடங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்து இருக்கிறது. அதாவது கடந்த 2011 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதிலும் அஜித் அந்த படத்தில் ஒரு ஆன்ட்டி ஹீரோவாக நடித்திருந்தது ரசிகர்களை கொண்டாட வைத்தது.

அதனாலேயே இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் வருட கணக்கில் காத்திருந்தனர். தற்போது அவர்களின் ஆசை நிறைவேற போகிறது. மேலும் ஏகே 62 திரைப்படத்தை வெங்கட் பிரபு தான் இயக்கப் போகிறார் என கோலிவுட்டின் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி என்றால் மகிழ் திருமேனி என்ன ஆனார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

உண்மையில் ஏகே 62 திரைப்படம் இவர் கைக்குத்தான் செல்ல இருந்தது. ஆனால் அஜித் ஸ்கிரிப்ட் வேலைகளில் சில மாற்றங்களை கூறியிருப்பதால் அதற்கான வேலை இப்போது நடந்து வருகிறதாம். அதன் காரணமாகவே இப்போது ஏகே 62 திரைப்படம் வெங்கட் பிரபு கைக்கு சென்றுள்ளது. இதை அடுத்து மகிழ் திருமேனி ஏகே 63 படத்தை இயக்குவார் என்று சொல்லப்படுகிறது.

கூடிய விரைவில் இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை தயாரிப்பு நிர்வாகம் வெளியிட இருக்கிறதாம். அந்த வகையில் விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்திற்கு போட்டியாக மங்காத்தா 2 வர இருக்கிறது. இந்த விஷயம் தான் இப்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது.