இலங்கை அணிக்கு நாளைய தினம் காத்திருக்கும் சவால்

kaniat month's ago

  2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கு ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது.  இந்தியாவில், அடுத்த ஆண்டு உலககிண்ண  (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.  மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடருக்காக, இதுவரை, போட்டியை நடத்தும் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா,  பங்களாதேஷ், பாகிஸ்தான் என 6 அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த நிலையில் இலங்கை சென்றுள்ள  ஆப்கானிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது. பல்லேகலேயில் நடந்த இரண்டாவது போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இதையடுத்து தொடருக்கான புள்ளிப்பட்டியலில் 5 புள்ளி கூடுதலாக பெற்ற ஆப்கானிஸ்தான், 115 புள்ளிகளுடன் 7வது இடத்தை கைப்பற்றியது. இதன்மூலம் உலகக்கிண்ண  (2023) பிரதான சுற்றில் விளையாட அந்த அணி தகுதி பெற்றது. இதனையடுத்து  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நாளைய  கடைசி போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் பட்சத்தில் (67) புள்ளிகளுடன் 10வது இடத்தைப்  பெறும். ஏற்கனவே மேற்கிந்திய தீவுகள்  (88 புள்ளி), அயர்லாந்து (68) அணிகள் முறையே 8, 9வது இடத்தில் உள்ளன. தென் ஆப்பிரிக்க அணி 11வது இடத்தில் உள்ளது.