அமெரிக்கா-நியூயார்க் மாகாண லிடோ கடற்கரையில் கரை ஒதுங்கிய 35 அடி நீளம் கொண்ட ராட்சத திமிங்கலம்

#America #Newyork #beach #Fish #world news #Tamilnews #Lanka4
Prasuat month ago

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் ஹெம்ப்ஸ்டெட்நகரில் லிடோ கடற்கரை அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் காலை ராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. 

இது குறித்து மீட்பு குழுவினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் திமிங்கலத்தை மீட்டு கடலுக்குள் விடுவதற்காக சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் திமிங்கலம் உயிரிழந்துள்ளது.

இதையடுத்து மீட்பு குழுவினர் 35 அடி நீளம் கொண்ட அந்த ராட்சத திமிங்கலத்தை கிரேன் மூலமாக கடற்கரையில் இருந்து நகர்த்தியுள்ளனர். அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் திமிங்கலங்கள் இப்படித்தான் மர்மமான முறையில் சத்து கரை ஒதுங்குவது வழக்கமாகி வருகிறது. 

நியூயார்க் மாகாணத்தில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தையும் சேர்த்து கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 15 திமிங்கலங்கள் சத்து கரை ஓரங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.