அமெரிக்காவில் துப்பாக்கி தவறுதலாக சுடப்பட்டு உயிரிழந்த 25 வயதுடைய இந்திய மாணவன்

#America #Gun_Shoot #India #Student #Death #world news #Tamilnews #Lanka4
Prasuat month ago

தெலுங்கானா மாநிலம் மதிரா நகரத்தை சேர்ந்தவர் அகில் சாய் (வயது25). இவர் அமெரிக்கா மண்டோக மெரியில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவ உயர் படிப்பு படித்து வருகிறார். 

சம்பவத்தன்று பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வைத்து இருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்து அகில் சாய் தலையில் குண்டு பாய்ந்தது. 

இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இது பற்றி அறிந்ததும் தெலுங்கானாவில் வசித்து வரும் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மகன் உடலை சொந்த ஊர் கொண்டு வர மத்திய அரசும், தெலுங்கானா அரசும் முன் வரவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

அகில் சாய் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர்.