தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 489 பேர் கைது!

#Sri Lanka #Arrest #Lockdown
Yugaat day's ago

நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 489 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன்போது 29 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்துக்கு உள்நுழையும் மற்றும் வெளியேறும் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிப் பயணித்த 174 வாகனங்களில் வந்த 334 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.