25.11.2021 இன்றைய ராசி பலன்

Keerthiat day's ago

மேஷம்: 
அசுவினி: குடும்பத்தினரின் செயல்பாடுகள் காரணமாக மகிழ்ச்சி ஏற்படும்.
பரணி: முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு உண்டு.
கார்த்திகை 1: வசதிவாய்ப்புகள் அதிகரிக்கும் நாள். வரவு திருப்தி தரும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: நேர்த்தியாகப் பணிகளை செய்து முடித்து மகிழ்வீர்கள்.
ரோகிணி: அலைச்சல் ஏற்படும். உழைப்பிற்கேற்ற நல்ல பலன் கிடைக்கும்.
மிருகசீரிடம் 1,2: சிறு சிறு பிரச்னைகளை தவிர்த்து நிம்மதி அடைவீர்கள்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: அக்கம்பக்கத்தினரிடம் சுமுகமாக நடந்து கொண்டு நற்பெயர் பெறுவீர்கள்.
திருவாதிரை: உங்களை விட உயர்ந்தோர் நட்பு இன்று கிடைக்கும்.
புனர்பூசம் 1,2,3: பிறரது சிரமத்தை புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவுவீர்கள்.

கடகம்: 
புனர்பூசம் 4: உங்களது முயற்சியால் குடும்பத்தில் இருந்த சிரமங்கள் தீரும்.
பூசம்: குதுாகல நிகழ்வு ஒன்றில் பங்கேற்பீர்கள். பல நாள் சந்தேகம் தீரும்.
ஆயில்யம்: விரும்பிய பொருளை வாங்குவீர்கள். அலைச்சல் அதிகமாக இருக்கும்.

சிம்மம்: 
மகம்: மனதில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான நிலை மாறும்.
பூரம்: பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும்.
உத்திரம் 1: நின்றுபோன பணி ஒன்றை இன்று தொடருவீர்கள். நிம்மதியான நாள்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: உடன் பணிபுரிபவர்களுடன் சுமுகமாக நடந்து கொள்வீர்கள்.
அஸ்தம்: புதிய நண்பர் ஒருவரால் நன்மை நிகழ்ந்து உங்களை மகிழ்விக்கும்.
சித்திரை 1,2: இத்தனை நாட்களை விட இன்று அதிக வழிபாடு செய்வீர்கள்.

துலாம்
சித்திரை 3,4: பணியாளர்கள் கடமை ஒன்றை முடித்து நிம்மதி அடைவீர்கள்.
சுவாதி: முயற்சி செய்து உங்களது சுயதேவையை நிறைவு செய்து கொள்வீர்கள்.
விசாகம் 1,2,3: தொழில் அல்லது பணியில் ரகசியம் ஒன்று தெரிய வரும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: உடன் பிறந்தவர்களுடன் உல்லாசமாகப் பொழுதுபோகும்.
அனுஷம்: நீங்கள் முன்பு செய்த தவறு ஒன்று இன்று மன்னிக்கப்படும்.
கேட்டை: குடும்பத்தில் ஒருவரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவீர்கள்.

தனுசு: 
மூலம்: கடன் தொல்லைகளில் இருந்து ஓரளவு விடுபடுவீர்கள்
பூராடம்: எதற்காகவும் குறுக்கு வழிகளை நாடவேண்டாம்.
உத்திராடம் 1: செயல்களில் மிகுந்த கவனமும், நேர்மையும் தேவை.

மகரம்
உத்திராடம் 2,3,4: தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதுமைகள் செய்வீர்கள்.
திருவோணம்: சிரமத்தைத் தவிர்க்க வழி கண்டறிந்து நிம்மதி பெறுவீர்கள்.
அவிட்டம் 1,2: அழகுணர்ச்சி அதிகரிக்கும். செலவு கூடும். பயம் தீரும்

கும்பம்: 
அவிட்டம் 3,4: வருமானம் உயரும். வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும்.
சதயம்: பொறுப்புகள் உங்களை தேடி வரும். மற்றவரால் மதிக்கப்படுவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும்.

மீனம்: 
பூரட்டாதி 4: உங்களை மற்றவர்கள் புதிர் போல் பார்ப்பார்கள்.
உத்திரட்டாதி: சிறு சிறு செலவுகள் வரலாம். பகைவர்கள் மனம் மாறுவர்.
ரேவதி: குழந்தைகளிடம் இருந்து நற்செய்தி வரும். நல்ல நட்பு கிடைக்கும்.