23.11.2021 இன்றைய ராசி பலன்

#Todayrasipalan #Rasipalan #Dailyrasipalan
Rehaat day's ago

மேஷம்: 
அசுவினி: பணப்புழக்கம் முன்பைவிடச் சற்றே மேம்படும். சலிப்பு தீரும்.
பரணி: நடுவில் நின்றுபோயிருந்த நன்மைகள் இன்றிலிருந்து தொடரும்.
கார்த்திகை 1: பல நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி வரும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: குடும்பத்தினருக்கு நன்மை ஒன்று வந்து உங்களை மகிழ்விக்கும்.
ரோகிணி: உஷ்ணம் சம்பந்தமான சிரமம் வராமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
மிருகசீரிடம் 1,2: நின்றுபோயிருந்த பேச்சுவார்த்தை திடீரென இன்று தொடரும்

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: வாழ்க்கைத்துணைக்கு திடீர் அதிர்ஷ்டம் வரும். மகிழ்ச்சி கூடும்.
திருவாதிரை: இளம் வயதினருக்கு காதலில் ஈடுபாடு புதிதாக வரும்.
புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் புதிய வரவு ஒன்று உறுதி செய்யப்படும்.

கடகம்: 
புனர்பூசம் 4: நன்கு உழைக்கும் மாணவர்களுக்கு நற்செய்தி உண்டு.
பூசம்: புதிய விஷயம் கற்கும் ஆர்வமும், ஈடுபாடும் உங்களுக்கு வரும்.
ஆயில்யம்: உங்களின் புத்திசாலித்தனமும், கவர்ச்சி அம்சமும் ஒருங்கே அதிகரிக்கும்.

சிம்மம்: 
மகம்: கலை ஆர்வம் ஏற்படும். பணியிடத்தில் நல்ல செய்தி உண்டு.
பூரம்: அதிர்ஷ்டம் காரணமாக நன்மை வரும். தந்தைக்கு நற்செய்தி வரும்.
உத்திரம் 1: எதிர்பாலினத்து நட்புகளுடன் மகிழ்ச்சியாகப் பொழுது போகும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: கவலை ஒன்று தீரும். ஒன்றுக்கு மேற்பட்ட லாபங்கள் வரும்.
அஸ்தம்: வாழ்க்கைத்துணையால் நன்மை ஏற்படும். உங்களின் பொறுமை வெல்லும்.
சித்திரை 1,2: தொல்லை ஒன்றிலிருந்து விடுபடுவீர்கள். தாமதம் தீரும்.

துலாம்: 
சித்திரை 3,4: திறமையான பேச்சினால் பிரச்னை ஒன்றைத் தீர்ப்பீர்கள்.
சுவாதி: குடும்பத்தில் காணாமல் போயிருந்த கலகலப்பு மீளும்.
விசாகம் 1,2,3: தடை, தாமதங்களை கண்டு பயப்படாமல் எதிர்த்து வெல்லுங்கள்.

விருச்சிகம்: 
விசாகம் 4: திடீரென்று நல்ல செய்தி ஒன்று கிடைத்து உங்களை திக்குமுக்காட வைக்கும்.
அனுஷம்: குடும்பத்தில் ஒருவரால் பெருமிதம் அளிக்கும் நன்மை உண்டாகும்
கேட்டை: நேற்றைய பொறுமையால் இன்று வெற்றி பெற்று நிம்மதி அடைவீர்கள்.

தனுசு: 
மூலம்: பேச்சிலும், செயலிலும் கவனமாக இருந்தால் பிரச்னை வராது.
பூராடம்: குழந்தைகளால் ஏற்பட்டிருந்த பயம் நீங்கும். நட்பு வட்டம் விரியும்.
உத்திராடம் 1: திடீர் நற்செய்தி வந்து உங்களை மகிழ்விக்கும். புது விஷயம் கற்பீர்கள்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: தாயாருக்கு நன்மை செய்து அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள்.
திருவோணம்: வேலை தேடுவோருக்கு நற்செய்தி கிடைக்கும். பெண்கள் பேச்சை குறைக்கவும்.
அவிட்டம் 1,2: உறவினர் இடையே நடக்கும் பிரச்னையில் நீங்கள் தலையிட வேண்டாம்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: உடல், மனதில் ஏற்பட்டுள்ள சோர்வு தற்காலிகமானதே.
சதயம்: பணியாளர்கள் நிலுவைப் பணிகளை செய்து முடித்து நிம்மதி அடைவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: மனதில் தீய எண்ணம் உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மீனம்: 
பூரட்டாதி 4: புதிய விஷயங்களில் ஈடுபடுவது பற்றி இன்று யோசிப்பீர்கள்.
உத்திரட்டாதி: நண்பருக்கு நன்மை செய்வீர்கள். உங்களின் எதிர்பார்ப்பு தாமதித்து நிறைவேறும்.
ரேவதி: பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நிதானமான நன்மைகள் உண்டு.