22.01.2022 இன்றைய ராசி பலன்

#Todayrasipalan #Rasipalan #Dailyrasipalan
Rehaat month's ago

மேஷம்: 
அசுவினி: இன்று சற்று பரபரப்பாக காணப்படுவீர்கள். துணிச்சல் வரும்.
பரணி: முன்பு பிரிந்த உறவினர் இன்று மீண்டும் ஒன்றுசேர வாய்ப்புண்டு.
கார்த்திகை 1: நண்பர்கள் வலிய வந்து உதவி செய்து மகிழ்விப்பார்கள்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: உங்களின் செயல்திறன் அதிகரிக்கும். நிம்மதியான நாள்.
ரோகிணி: குடும்பத்தில் நிலவிய பிரச்னைகள் நீங்கி அமைதி திரும்பும்
மிருகசீரிடம் 1,2: தேவையற்ற அலைச்சல் உண்டாகும். கலகலப்பான நாள்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: பழைய முயற்சி ஒன்றிற்கு இப்போது நற்பலன் ஏற்படும்.
திருவாதிரை: நல்ல நோக்கத்துடன் நீங்கள் எடுக்கும் முடிவுகள் பாராட்டப்படும்.
புனர்பூசம் 1,2,3: வெளிநாட்டு முயற்சிக்கு சாதகமான பதில் கிடைக்கும்.

கடகம்: 
புனர்பூசம் 4: பணியாளர்கள் சாப்பிட, துாங்க நேரமின்றி உழைப்பீர்கள்.
பூசம்: உடல் உஷ்ணம் சம்பந்தமான சிரமங்கள் நீங்கும். நிம்மதி வரும்
ஆயில்யம்: சொத்து வாங்கும் விஷயத்தில் யோசித்து முடிவு எடுங்கள்.

சிம்மம்: 
மகம்: இல்லற வாழ்வு இனிமையாக மாறி மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
பூரம்: நண்பர்கள், உறவினர் மத்தியில் உங்களின் புகழ் அதிகரிக்கும்.
உத்திரம் 1: குடும்பத்தில் உள்ள இளையவர்களால் பெருமிதம் வரும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: சங்கடம் ஏற்பட்டாலும் மாலையில் நன்மை உண்டாகும்.
அஸ்தம்: எதையும் நிதானித்து செய்தால் நன்மை அடைய முடியும்.
சித்திரை 1,2: சகோதர, சகோதரிகளால் சந்தோஷம் உண்டாகும்.

துலாம்: 
சித்திரை 3,4: உற்சாகமான நாள். நண்பர்களால் நன்மை உண்டாகும்.
சுவாதி: ஆரோக்கிய தொல்லை மறையும். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள்.
விசாகம் 1,2,3: நினைத்ததை முடிக்க நெருங்கிய நண்பர் உதவி செய்வார்.

விருச்சிகம்: 
விசாகம் 4: எதிலும் அதிக கவனத்துடன் செயல்படுவது நல்லது.
அனுஷம்: சொந்தத் தொழில் செய்பவர்கள் சிறப்படைவர்.
கேட்டை: மனதை அரித்துக்கொண்டிருந்த கவலை காணாமல் போகும்.

தனுசு: 
மூலம்: நீங்கள் வெறுத்த நண்பர் உங்களுக்கு திடீரெனக் கைகொடுப்பார்.
பூராடம்: புதிய வேலை வாய்ப்புகள் வந்தால் அதை யோசித்து ஏற்கலாம்.
உத்திராடம் 1: பேச்சில் கவனமாக இருந்தால் பழிகளில் இருந்து தப்பலாம்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: பொறுப்பான துறையில் உள்ளோருக்கு பணிச்சுமை கூடும்.
திருவோணம்: விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள்.
அவிட்டம் 1,2: எதிலும் சற்று விலகி நிற்பது நன்மை தரும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: உடல் ஆரோக்கியத்தில் தனிக்கவனம் செலுத்துங்கள்.
சதயம்: இளையோரின் ஆலோசனையை ஏற்பீர்கள். சேமிப்பில் ஆர்வம் கூடும்.
பூரட்டாதி 1,2,3: குழந்தைகளின் வாழ்வில் சிறப்பான திருப்பம் உண்டு.

மீனம்: 
பூரட்டாதி 4: சஞ்சலங்கள் நீங்கி நிம்மதி உண்டாகும். கலகலப்பான நாள்.
உத்திரட்டாதி: சுபச்செலவு உண்டு. நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள்.
ரேவதி: கவனத்தை முழுதாய்க் குவித்துக் கடமையில் கண்ணாயிருங்கள்.