20.01.2022 இன்றைய ராசி பலன்

Keerthiat month's ago

மேஷம்: 
அசுவினி: புதிய முயற்சி சாதகமாகும். எதிர்பாராத செலவுக்கு வாய்ப்பு உண்டு.
பரணி: வருமானம் திருப்தி தரும். இன்று முக்கிய நபரின் சந்திப்பு ஏற்படும்.
கார்த்திகை 1: அன்போடு பழகிய ஒருவர் உங்களின் மனக்குழப்பத்தை அகற்றுவார்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: கடன் பிரச்னை தீரும். உங்களின் ஆசை ஒன்று நிறைவேறும்.
ரோகிணி: வீட்டில் இதுவரை தள்ளிப்போன சுபவிஷயம் இன்று முடிவாகும்.
மிருகசீரிடம் 1,2: பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பக் கவலை தீரும்

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: வாழ்வில் மகிழ்ச்சி அளிக்கும்படியான திருப்பம் வரும்.
திருவாதிரை: மேலதிகாரிகள் உங்களுக்குப் பரிந்து பேசி நலம் அளிப்பர்.
புனர்பூசம் 1,2,3: இளைஞர்களுக்கு நல்ல விஷயம் நடைபெறும். மகிழ்ச்சியான நாள்.

கடகம்: 
புனர்பூசம் 4: உங்கள் முன்னேற்றத்திற்கு வித்திட்ட ஒருவரைச் சந்திக்க நேரிடும்.
பூசம்: எதையும் திட்டமிட்டு கால நேரம் தவறாமல் செயல்படுங்கள்
ஆயில்யம்: குடும்ப சந்தோஷம் கூடுதலாகும். சேமிப்பு அதிகரிக்கும்.

சிம்மம்: 
மகம்: ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சுபச்செய்தி வந்து மகிழ்விக்கும்.
பூரம்: சரியான ஓய்வு கிடைக்காமல் சோர்வடைந்த நிலை மாறும்.
உத்திரம் 1: செலவுகள் அதிகமாகாமல் பார்த்துக்கொள்வீர்கள்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: பழைய தவறெல்லாம் தொடராதபடி கவனமாக இருப்பீர்கள்.
அஸ்தம்: எந்தவொரு வேலையையும் கவனமுடன் செய்வது அவசியம்.
சித்திரை 1,2: தைரியமாக முடிவெடுப்பீர்கள். சொந்த வீட்டுக்குக் குடி போவீர்கள்.

துலாம்: 
சித்திரை 3,4: குடும்பத்தில் இன்று கலகலப்பான சூழல் உருவாகும்.
சுவாதி: பிறருடன் அன்பாகப் பேசுவதன் மூலம் பிரச்னைகளை தீர்க்கலாம்,
விசாகம் 1,2,3: மகிழ்ச்சி தரும் செய்தி வரும். நட்பு வட்டம் விரியும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: இன்று மேலதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள்.
அனுஷம்: பேச்சு, செயல்பாடுகளில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது.
கேட்டை: சுபச்செய்தி ஒன்று வந்து மகிழ்ச்சி தரும். சருமப்பாதுகாப்பு அவசியம்.

தனுசு: 
மூலம்: வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும்.
பூராடம்: உங்களது துறையில் கடுமையாக முயற்சி செய்து வெற்றி பெறுவீர்கள்.
உத்திராடம் 1: உறவினர்களை விட்டுக்கொடுக்காமல் உறுதியாக இருப்பீர்கள்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிட வேண்டாம்
திருவோணம்: புத்திக்கூர்மையால் கடினமான பணிகளைக்கூட எளிதாக முடிப்பீர்கள்.
அவிட்டம் 1,2: குடும்பத்தில் ஒருவருக்கு வரன்கள் தேடி வரும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: தொழில் தொடங்குவோர் ஆலோசித்து முடிவு எடுக்கவும்.
சதயம்: பணிச்சுமை அதிகமாகலாம். பேச்சில் கவனம் தேவை.
பூரட்டாதி 1,2,3: சிலருக்கு தந்தை வழி உறவினர் மூலம் உதவி கிடைக்கும்.

மீனம்: 
பூரட்டாதி 4: விரும்பிய இடத்தில் பணிபுரிய வாய்ப்பு வரலாம்
உத்திரட்டாதி: சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வரவு திருப்தியளிக்கும்
ரேவதி: நிலுவைப் பணிகளை செய்து முடித்து நிம்மதி காண்பீர்கள்.