14.01.2022 இன்றைய ராசி பலன்

Prasuat day's ago

மேஷம்: 
அசுவினி: பணப்புழக்கம் உயரும். தள்ளிப்போன பயணம் இன்று அமையும்.
பரணி: எதிர்பாராத நிகழ்வுகளால் மனதில் புத்துணர்ச்சி பெறுவீர்கள்
கார்த்திகை 1: சிரமமான நேரத்தில் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: சேமிப்பில் ஆர்வம் கூடும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.
ரோகிணி: குடும்பத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும்
மிருகசீரிடம் 1,2: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகளை இன்று எடுப்பீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: நல்ல காரணங்களுக்காக செலவுகள் அதிகரிக்கலாம்.
திருவாதிரை: விருப்பத்துக்குரியவரின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள்.
புனர்பூசம் 1,2,3: சம்பள உயர்வு பற்றிய சந்தோஷச் செய்து வந்து சேரும்

கடகம்: 
புனர்பூசம் 4: தாயாரின் உடல்நிலை குறித்து இருந்து வந்த பயம் தீரும்.
பூசம்: உங்களது பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.
ஆயில்யம்: பெண்கள் குடும்ப நலனில் மிகுந்த அக்கறை கொள்வர்

சிம்மம்: 
மகம்: எதிர்பாராத நன்மையை அடைவீர்கள். உங்களது செல்வாக்கு அதிகரிக்கும்.
பூரம்: வரவு அதிகரிக்கும். நற்செய்தி ஒன்று உண்டு. மகிழ்ச்சி கூடும்.
உத்திரம் 1: செலவுகள் குறைய ஆரம்பிக்கும். நிம்மதி கூடுதலாகும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: நல்ல வகையிலான செலவு அதிகரிக்கும். பயம் நீங்கும்.
அஸ்தம்: வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. நட்பு வட்டம் விரியும்.
சித்திரை 1,2: உறவினர் வருகையால் மனதில் இருந்த குழப்பம் தீரும்.

துலாம்: 
சித்திரை 3,4: எதிர்பாராத பணவரவு உண்டு. தந்தைக்கு அதிர்ஷ்டம் ஏற்படும்.
சுவாதி: செயலில் கவனம் தேவை. குழந்தைகளின் போக்கு பற்றி பயம் வரும்.
விசாகம் 1,2,3: வழக்குகளில் வெற்றி கிடைக்க தாமதமாகும். கலையார்வம் வரும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. சேமிப்பில் ஆர்வம் கூடும்.
அனுஷம்: வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு சுபச்செய்திகள் தேடி வரும்.
கேட்டை: எதிரிகளின் தொல்லை ஒழியும். ஷேர் மார்க்கெட் லாபத்தை தரும்.

தனுசு: 
மூலம்: நீண்ட நாளாக பணியிடத்தில் இருந்து வந்த சிக்கல் ஒன்று தீரும்.
பூராடம்: புதிய வாய்ப்பு உங்களைத் தேடி வரும். எதிர்பாராத பணவரவு உண்டு.
உத்திராடம் 1: வீட்டில் சுபநிகழ்ச்சிக்கான முயற்சி நடைபெறும். மகிழ்ச்சி கூடும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: உங்களது முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். கஷ்டம் தீரும்.
திருவோணம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றி பிறரிடம் பாராட்டு பெறுவீர்கள்.
அவிட்டம் 1,2: உங்கள் உதவியால் உறவினர் ஒருவரின் திருமணம் கூடிவரும்

கும்பம்: 
அவிட்டம் 3,4: மகன், மகளுக்கு இருந்து வந்த கவலைகள் அனைத்தும் தீரும்.
சதயம்: குழந்தைகளை பற்றி எதிர்பார்த்திருந்த சுபச்செய்திகள் தேடி வரும்.
பூரட்டாதி 1,2,3: உடல் ஆரோக்கியம் மேம்படும். திடீர் யோகம் உண்டாகும்.

மீனம்: 
பூரட்டாதி 4: மாணவர்களுக்கு படிப்பு விஷயங்களில் இருந்த குழப்பம் நீங்கும்.
உத்திரட்டாதி: பெண்கள் ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்ச்சி அடைவர்.
ரேவதி: பணியாளர்களின் முயற்சி வெற்றி பெறும். குழந்தைகளால் நன்மை உண்டு.

சோதிடம் தொடர்பாக மேலும் அனைத்துப் பலன்களைப் பார்வையிட இதில் கிளிக் செய்யவும்