12.01.2022 இன்றைய ராசி பலன்

Keerthiat day's ago

மேஷம்: 
அசுவினி: உங்களின் சமூக அந்தஸ்து உயரும். நிதி நிலை மேம்படும்.
பரணி: அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். சேமிப்பு அதிகரிக்கும்.
கார்த்திகை 1: அரசு சம்பந்தமான விஷயங்களில் இருந்த தடைகள் நீங்கும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: கடினமான வேலைகளைக் கூட எளிதாக செய்து முடிப்பீர்கள்.
ரோகிணி: நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்னை ஒன்று தீரும்.
மிருகசீரிடம் 1,2: நீங்கள் மேற்கொள்ளும் வெளியூர் பயணம் சாதகமாக இருக்கும்.

மிதுனம்: 
மிருகசீரிடம் 3,4: குழந்தைகளை பற்றி இருந்து வந்த கவலை அனைத்தும் தீரும்.
திருவாதிரை: சிலருக்கு அதிர்ஷ்டம் வரலாம். தந்தைக்கு நன்மை ஏற்படும்.
புனர்பூசம் 1,2,3: முந்தைய நாளில் இருந்து வந்த சிரமம் ஒன்று நீங்கும்.

கடகம்: 
புனர்பூசம் 4: இத்தனை நாளாக இருந்து வந்த எதிர்ப்பு அகலும்.
பூசம்: பயணங்கள் சாதகமான பலன் தரும். கடன் அனுமதி கிடைக்கும்.
ஆயில்யம்: எந்த நன்மையும் சற்று நிதானமாகவே நடக்கும். நண்பர் உதவுவார்.

சிம்மம்: 
மகம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு.
பூரம்: பிரச்னை ஒன்றிலிருந்து விடுபடுவீர்கள். வரவேண்டிய பாக்கிகள் வந்துசேரும்.
உத்திரம் 1: மனக்குழப்பம் அகலும். அன்பும், ஆதரவும் பெருகும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: விலை உயர்ந்த பொருட்களை வாங்கும்போது எச்சரிக்கை தேவை.
அஸ்தம்: பணத்தை பாதுகாப்பாக வைப்பது நல்லது. வீண் பயம் வேண்டாம்.
சித்திரை 1,2: தேவையற்ற சந்தேகம் காரணமாக குழப்பம் அடையாதீர்கள்.

துலாம்: 
சித்திரை 3,4: கூடுதலாக பணியாற்றுவதால் பதவி உயர்வு கிடைக்கலாம்.
சுவாதி: பணியிடத்தில் இருப்பவர்களை எதிர்க்க வேண்டாம். யோகமான நாள்.
விசாகம் 1,2,3: வாக்குவாதம், வீண் பேச்சுகளை தவிர்ப்பது நன்மை தரும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: வாகனத்தால் ஏற்பட்ட செலவுகள் முடிவுக்கு வரும்.
அனுஷம்: தாயார் பற்றிய கவலை தீரும். யாரிடமும் கோபப்பட வேண்டாம்.
கேட்டை: புதிய சொத்துக்கள் வாங்குவது பற்றிய முயற்சி பலிக்கும்.

தனுசு: 
மூலம்: குடும்பத்தில் சிறு சிறு பூசல்கள் ஏற்பட்டு உடனே நீங்கும்.
பூராடம்: மகன், மகளிடம் சற்று நிதானமாகப் பேசுவது நல்லது.
உத்திராடம் 1: உங்களின் நிம்மதி உங்கள் கையில்தான் உள்ளது.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: கூடுதலாக உழைத்து எந்தவொரு விஷயத்தையும் முடிப்பீர்கள்.
திருவோணம்: நல்ல செய்தி ஒன்று வரும். பயணம் செல்ல நேரிடலாம்.
அவிட்டம் 1,2: எதிர்கால நலன் குறித்த சிந்தனை மேலோங்கும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: கூடுதலாக உழைத்தால் முயற்சியில் வெற்றி பெறலாம்.
சதயம்: உங்களின் நம்பிக்கை வெல்லும் நாள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பூரட்டாதி 1,2,3: நாடு விட்டு நாடு சென்ற உறவினர் பற்றிய கவலை நீங்கும்.

மீனம்:
 பூரட்டாதி 4: புதிய திட்டம் தீட்டுவீர்கள். தொல்லை தந்தவர்கள் விலகுவர்.
உத்திரட்டாதி: இனிய அனுபவம் ஒன்று ஏற்படும். பண உதவி கிடைக்கும்.
ரேவதி: வீடு, வாகனம் வாங்குவதில் கூடுதல் ஆர்வம் காட்டுவீர்கள்.

சோதிடம் தொடர்பாக மேலும் அனைத்துப் பலன்களைப் பார்வையிட இதில் கிளிக் செய்யவும்