04.12.2021 இன்றைய ராசி பலன்

Keerthiat month ago

மேஷம்: 
அசுவினி: கூடுதல் உழைப்பால் நன்மை காண்பீர்கள். கலகலப்பான நாள்.
பரணி: உங்களின் இனிய முயற்சியால் உறவினரின் பிரச்னை முடிவுக்கு வரும்.
கார்த்திகை 1: கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: பிறருடன் விட்டுக் கொடுத்து சென்று நன்மை அடைவீர்கள்.
ரோகிணி: நண்பர்கள் இடையே இருந்து வந்த சிறு சிறு மனக்கசப்புகள் தீரும்.
மிருகசீரிடம் 1,2: நல்ல செய்தி ஒன்று மாலை நேரத்தில் வர வாய்ப்பு உள்ளது.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: உங்களின் முயற்சி கைகூடும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருவாதிரை: பொதுநல விஷயத்தில் ஈடுபட்டு பாராட்டைப் பெறுவீர்கள்.
புனர்பூசம் 1,2,3: பணியாளர்கள் புதிய முயற்சிகளில் வெற்றி காண்பர்.

கடகம்: 
புனர்பூசம் 4: பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் செலவும் கூடும்.
பூசம்: உணவுக் கட்டுப்பாட்டை கைக்கொண்டால் உடல் ஆரோக்கியம் சிறக்கும்.
ஆயில்யம்: ஆன்மிகச் சிந்தனை அதிகரிக்கும். புதியவர்களிடம் கவனம் தேவை.

சிம்மம்: 
மகம்: புதிய விஷயத்தைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் வரும்.
பூரம்: வெற்றிகரமான நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.
உத்திரம் 1: பணியில் செயல் திறனும், வேகமும் கூடும். சிறப்பான நாள்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: மறைமுகப்போட்டிகள் எல்லாம் திடீரென்று காணாமல் போகும்.
அஸ்தம்: உடல் ஆரோக்கியம் மேம்படும். நட்பு வட்டம் விரிவடையும்.
சித்திரை 1,2: குடும்பத்தில் அமைதி நிலவும். பேச்சினால் நன்மை வரும்.

துலாம்: 
சித்திரை 3,4: எதிர்பாராத பணவரவு இன்று கிடைக்க வாய்ப்பு உண்டு.
சுவாதி: குழந்தைகளின் வாழ்வில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
விசாகம் 1,2,3: உங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படலாம்.

விருச்சிகம்: 
விசாகம் 4: அவசியமற்ற விஷயங்களுக்கு எல்லாம் கோபப்பட வேண்டாம்.
அனுஷம்: குடும்பத்தில் சுபச்செய்தி வர வாய்புண்டு. நீண்ட நாளைய கவலை தீரும்.
கேட்டை: பணியிடத்தில் சகஊழியர்கள் மத்தியில் உங்களின் புகழ் அதிகரிக்கும்.

தனுசு: 
மூலம்: உங்களின் கவரும் தன்மை அதிகரிக்கும். பேச்சில் கவனமாக இருங்கள்.
பூராடம்: உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை என்ற கவலை வேண்டாம்.
உத்திராடம் 1: சோம்பலைத் தவிர்த்து முனைப்புடன் செயல்படுவது நல்லது.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: அலுவலகத்தில் உள்ளவர்களை அனுசரித்து சென்று நன்மை காண்பீர்கள்.
திருவோணம்: விரயங்கள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். உடல்நலம் மேம்படும்.
அவிட்டம் 1,2: உடனிருப்பவர்களால் நன்மை ஏற்படும். சேமிப்பில் ஆர்வம் கூடும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும். சுபநிகழ்ச்சி உண்டு.
சதயம்: அனைவருமே உங்களுக்கு எதிராக இருப்பதுபோல் கற்பனை செய்ய வேண்டாம்.
பூரட்டாதி 1,2,3: சகோதரர்களிடம் சுமுக உறவு மேம்படும். செலவுகள் குறையும்.

மீனம்: 
பூரட்டாதி 4: புதிய தொழில் தொடங்குவது பற்றி யோசித்து செயல்படவும்.
உத்திரட்டாதி: குடும்ப ஒற்றுமை பலப்படும். தாயாருக்கு நன்மை வரும்.
ரேவதி: பணிகளில் கவனம் செலுத்தி நன்மை காண்பீர்கள். கலகலப்பான நாள்.