03.12.2021 இன்றைய ராசி பலன்

Keerthiat month ago

மேஷம்: 
அசுவினி: எந்த வம்பிலும் ஈடுபடாமல் இருந்தால் அருமையான நாள்.
பரணி: ஒவ்வொரு செயலையும் கவனமாகச் செய்தால் நல்லது.
கார்த்திகை 1: உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: புத்துணர்வு ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.
ரோகிணி: குறுக்கு வழியில் அழைத்துச் செல்லும் நண்பரை விலக்குங்கள்.
மிருகசீரிடம் 1,2: வியாபாரிகள் சில நன்மைகளை காண்பர். நட்பு வட்டம் விரியும்.

மிதுனம்: 
மிருகசீரிடம் 3,4: மனதில் உற்சாகமும் செயல்களில் நேர்த்தியும் நிறைந்திருக்கும்.
திருவாதிரை: பொருளாதார பிரச்னையில் இருந்து வெளியே வருவீர்கள்.
புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். மகிழ்ச்சி கூடும்.

கடகம்: 
புனர்பூசம் 4: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும்.
பூசம்: எடுத்த முயற்சிகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது.
ஆயில்யம்: திட்டமிட்டு பணிகளை செய்து மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள்.

சிம்மம்: 
மகம்: பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி தென்படும். சுபமான நாள்.
பூரம்: தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை எட்டுவீர்கள்.
உத்திரம் 1: குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். மாணவர்கள் முன்னேற்றம் காண்பர்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: பூர்வீக சொத்துக்களால் ஏற்பட்டிருந்த சிறு குழப்பங்கள் அகலும்.
அஸ்தம்: ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். உயரதிகாரியின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.
சித்திரை 1,2: குடும்பத்தினருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

துலாம்: 
சித்திரை 3,4: வெளிநாட்டில் இருந்து வரும் செய்தி மகிழ்ச்சி தரும்.
சுவாதி: நண்பர்களின் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்..
விசாகம் 1,2,3: உங்களுக்கு ஆதாயம் தரும் செய்தி வரும். கவலை ஒன்று நீங்கும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: லாபமும், வருமானமும் சந்தோஷத்தை தரும். உற்சாகமான நாள்.
அனுஷம்: திடீர் மாற்றம் ஒன்று நிகழ்ந்து உற்சாகத்தை ஏற்படுத்தும். குடும்பம் மகிழும்.
கேட்டை: சுபச்செய்தி வரும். குடும்பத்தில் அமைதி மீளும். நிதி நிலை உயரும்.

தனுசு: 
மூலம்: சகோதர, சகோதரிகளுடன் ஒற்றுமையும், சந்தோஷமும் நிலவும்.
பூராடம்: நீங்கள் எடுத்துக் கொண்ட பொறுப்பு ஒன்று எளிதாக முடியும்.
உத்திராடம் 1: பொருளாதாரத்தேவை நிறைவேறும். உங்களின் உழைப்பு பலன் தரும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: குடும்ப ஒற்றுமை பற்றிய கவலை தீர்ந்து நிம்மதி வரும்.
திருவோணம்: பேச்சினால் நன்மை அடைவீர்கள். நண்பர்கள் உயர்வார்கள்.
அவிட்டம் 1,2: உங்களின் முயற்சியால் பகை ஒன்று தீரும். உழைப்பு அதிகமாகும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: உறவினர்களால் ஏற்பட்ட செலவுகளை ஈடுகட்டுவீர்கள்.
சதயம்: நண்பர்கள் நன்மை செய்வார்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.
பூரட்டாதி 1,2,3: நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்னை ஒன்று தீரும்.

மீனம்: 
பூரட்டாதி 4: எடுத்த செயலில் மிகுந்த முயற்சி செய்து வெற்றி அடைவீர்கள்.
உத்திரட்டாதி: பொதுநலச்செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
ரேவதி: புதிய முயற்சியில் சுமாரான வெற்றி அடைவீர்கள். வரவு கூடும்.