02.12.2021 இன்றைய ராசி பலன்

Prasuat month ago

மேஷம்
அசுவினி: பேச்சு, செயல்களில் இன்று மிகவும் கவனமாக இருக்கவும்.
பரணி: இன்று நன்மைகளை எதிர்பார்க்கலாம். ஆன்மிகப் பணி செய்வீர்கள்.
கார்த்திகை 1: விலகிச் சென்ற கூட்டாளிகள் மீண்டும் வந்து சேரலாம்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: மனதில் உற்சாகம் நிலவும். சேமிப்பு அதிகரிக்கும்.
ரோகிணி: ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கலகலப்பான நாள்.
மிருகசீரிடம் 1,2: வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலை ஒழுங்குபடுத்துவீர்கள்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்க வேண்டிய நாள்.
திருவாதிரை: இன்று முக்கிய முடிவு எடுப்பீர்கள். பாதியில் நின்ற விஷயத்தை தொடருவீர்கள்.
புனர்பூசம் 1,2,3: குழந்தைகளின் முன்னேற்றமும், உயர்வும் உங்களை மகிழ்விக்கும்.

கடகம்: 
புனர்பூசம் 4: உற்சாகத்துடன் செயல்பட்டு சூழலை கலகலப்பாக்குவீர்கள்
பூசம்: மனநிம்மதி அதிகரிக்கும். நட்பு வட்டம் விரிவடையும்.
ஆயில்யம்: பணப்பற்றாக்குறை தீரும். உணவு விஷயத்தில் கவனம் தேவை.

சிம்மம்: 
மகம்: உங்களிடம் உள்ள நிலத்தை நல்ல விலைக்கு விற்பீர்கள்.
பூரம்: பேச்சில் கவனம் தேவை. பயணத்தால் உற்சாகம் கூடும்.
உத்திரம் 1: பிறருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பயம் ஒன்று தீரும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வீண் விரயம் குறையும்.
அஸ்தம்: நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். நிம்மதி ஏற்படும்.
சித்திரை 1,2: உறவினர்களால் நன்மை ஏற்படும். உழைப்பால் ஆதாயம் உண்டு.

துலாம்: 
சித்திரை 3,4: நீங்கள் தொட்டது துலங்கும் நாள். நட்பால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சுவாதி: வீடு, நிலம் போன்றவை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
விசாகம் 1,2,3: புதிய நண்பர்கள் சிறப்பாக அமைவர். தாமதங்கள் நீங்கும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: குடும்பத்தில் உள்ள பெரியோரின் உடல்நலம் சீராகும்.
அனுஷம்: உற்சாகமாக பணிச்சுமையை சுமப்பீர்கள். யோகமான நாள்.
கேட்டை: புதிய பயணத்திட்டங்கள் உருவாகி உற்சாகத்தைக் கூட்டும்.

தனுசு: 
மூலம்: நிதானமாக செயல்பட்டு முக்கியமான வேலைகளை முடிப்பீர்கள்.
பூராடம்: வேலைப்பளு அதிகரித்தாலும் அதை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள்.
உத்திராடம் 1: தொழிலில் லாபம் வரும். மாணவர்கள் உயர்வடைவீர்கள்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: குடும்பத்தில் சிறு சிறு மகிழ்ச்சிகள் ஏற்படும்.
திருவோணம்: பணி, வியாபார விஷயம் ஒன்றில் நல்ல தீர்வு காண்பீர்கள்
அவிட்டம் 1,2: உற்சாகத்துடன் செயல்பட்டு வெற்றிப் பாதையில் பயணிப்பீர்கள்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: நீண்ட காலமாக எதிர்பார்த்த நன்மை ஒன்றை பெறுவீர்கள்.
சதயம்: வியாபாரிகள் ஓய்வின்றி உழைத்து நன்மை காண்பீர்கள்.
பூரட்டாதி 1,2,3: பணவரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மீனம்: 
பூரட்டாதி 4: உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியை முன்னின்று நடத்துவீர்கள்.
உத்திரட்டாதி: பொருளாதார வளர்ச்சி காரணமாக மகிழ்ச்சி அடைவீர்கள்.
ரேவதி: உற்சாகம் கூடும். செயல்பாடுகளில் கூடுதல் கவனம் தேவை.